3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

இந்தியா சற்றுமுன்

சென்னை: தமிழகத்தில் டிச.,2, 4 மற்றும் 5ம் தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் டிச.,2, 4 மற்றும் 5ம் தேதிகளில் கனமழை பெய்யும். வடதமிழகம், தெற்கு ஆந்திரா இடையே வங்கக்கடலில் டிச.,2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இந்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் பெண்ணை, பாலாறு, கொசஸ்தலை, பாபநாசம், மணிமுத்தாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளத்தில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.

ஆந்திராவில் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் டிச.,5 முதல் கனமழை பெய்ய துவங்கும். கனமழை காரணமாக சோமசீலா, கண்டலேறு அணைகள், சொர்ணமுகி, களிங்கி ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதி ஏரிகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.