மதம் மாறி திருமணமா? ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்தது கட்டுப்பாடு!

இந்தியா சற்றுமுன்

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மதம் மாறி திருமணம் செய்ய கடும் வழிமுறைகள் விதித்துள்ளது

மதம் மாறி திருமணம் செய்ய கடும் வழிமுறைகளை விதித்துள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், அது தொடர்பாக சட்டம் இயற்றவும் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மதம் மாறுவோருக்கு விதித்துள்ள வழிமுறைகளை அடிப்படையாக வைத்து, ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

லவ் ஜிகாத் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், கட்டாயப்படுத்தி ஒருவர் மதமாற்றம் செய்யப்படுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.

அதேநேரத்தில் ஒருவர் தானாக விரும்பி, மதம் மாறினால், அதை மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியரிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும், அதை அந்த அதிகாரிகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மதம் மாறுவோர் ஒரு வாரத்திற்கு பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், வழிமுறைகளை மீறுவோரின் திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.