குஜராத், ஹிமாசலில் பாஜக., ஆட்சி அமைக்கிறது: வெற்றி பெற்றது மோடியின் செல்வாக்கு!

Published:

குஜராத், மற்றும் ஹிமாசலப் பிரதேச சட்ட மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பாஜக., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99ல் பாஜக., வெற்றி மற்றும் முன்னிலை பெற்றது. அங்கே ஆட்சி அமைக்கத் தேவையான 92 இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக., குஜராத்தில் எதிர்க்கட்சியாகத் திகழும் காங்கிரஸ் கடும் போட்டியை ஏற்படுத்தியது. அங்கே காங்கிரஸ் கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் அதிகமாக 79 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4ல் முன்னிலை பெற்றுள்ளன.

அதே போல் ஹிமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 44ல் பாஜக., வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் அங்கே 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. மற்ற கட்சியினர் 3 இடங்களில் வென்றனர்.

இதை அடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக.,வே ஆட்சி அமைக்கிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img