பணத்தை தவற விட்ட முதியவர்! கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறையினர்!

Published:

police-1

நீலகிரி அருகே பணப்பையை தவற விட்ட முதியவரிடம் காவல்துறையினர் பணத்தை ஓப்படைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை கிடந்ததுள்ளது. அந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரி என்ற பெண் காவலர் கண்டெடுத்துள்ளார். பின்னர் அதற்குள் பார்த்தபொழுது 2,27,000 ரூபாய் இருந்ததுள்ளது. ஆனால் அதை தவற விட்டு சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஊட்டி அருகே சோலூரில் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த நஞ்சன்(73) என்பவர் பணத்தை தவற விட்டு சென்றது தெரியவந்தது.

ரஞ்சன் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வங்கியிலிருந்து இரண்டு லட்சத்து இருபத்து ஏழாயிரம் ரூபாயை தனது நண்பர் உதவியின் மூலம் எடுத்துள்ளார். அப்போது அவர் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்த போது பணம் வைத்திருந்த பை தவறி கீழே விழுந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நஞ்சனை காவல் நிலையம் அழைத்து அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img