பிறந்த வீட்டிற்கு விருந்துக்கு வந்த புது மணப்பெண்! காதலனுடன் கம்பி நீட்டிய அதிர்ச்சி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
lovers
lover

திருமணம் முடிந்து சில தினங்களில் புதுமணப்பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் சதர்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ணிற்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்ற நபருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடித்து பெண் வீட்டில் செய்யப்படும் சடங்கிற்காகவும், விருந்திற்காகவும் புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு சடங்குகள் முடித்து மீண்டும் கணவன் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்த நிலையில் புதுமணப்பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

மேலும் வீட்டில் வைத்திருந்த 5 லட்சம் மதிப்பிலான நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் மற்றும் அவரது வீட்டார் பெண் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் பெண்ணை மீட்க கோரி பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணம் ஆகி சில தினங்கள் ஆன நிலையில் புதுப்பெண் பணம், நகையுடன் காதலனுடன் வீட்டை விட்டு சென்றது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.