பணம் வேணுமா? அப்ப அதுக்கு வா.. பெண்ணை அழைத்த பைனான்ஸ் நிறுவனர்!

Published:

finance - 2026

ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்ததால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

மகாராஷ்டிராவின் புனேவில், சிக்காலியைச் சேர்ந்த கோவிந்த் கிசான்ராவ் சாவந்த் மற்றும் கிர்கத்வாடியின் கவுதம் ஷிர்சாத் ஆகியோரால் ஒரு நிதி நிறுவனம் நடத்தப்படுகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் மக்களுக்கு தொழில் தொடங்க கடன் கொடுப்பதாக செய்தி தாளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தை பார்த்த பிம்ப்ரி சின்ச்வாட்டை சேர்ந்த ஒரு பெண் அந்த நிதி நிறுவனத்தில் ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்தார் .

அதன் பிறகு இந்த கடனுக்காக அவர்கள் கேட்ட டாக்குமென்டுகளை அளித்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த் கிசான்ராவ் சாவந்த் அந்த பெண்ணை நேரில் வரச்சொன்னார்.

அதனால் அந்த பெண் அந்த நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் இந்த கடனை வழங்க வேண்டுமென்றால் அவருடன் அந்த பெண் பாலியல் உறவில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

மேலும் இன்னொருவர் இதற்கான கமிஷன் தொகையாக 30000 கொடுக்க வேண்டுமென்றார். அவர்களின் பாலியல் மற்றும் கமிஷன் கோரிக்கையை அந்த பெண் நிராகரித்தார். அதனை கேட்ட அவர்கள் அவருக்கு கடன் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

அதனால் அந்த பெண் வியாழக்கிழமையன்று (மார்ச் 4) அங்குள்ள காவல் நிலயத்தில் அவர்கள் மீது புகார் கூறியுள்ளார். போலீசார் விசாரித்து , வழக்கு பதிவு செய்து அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த கோவிந்த் கிசான்ராவ் சாவந்த் மற்றும் கிர்கத்வாடியின் கவுதம் ஷிர்சாத் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் ஒரு பெண்ணும் பார்ட்னராக உள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img