சவுதியில் இறந்து போன இந்துவை முஸ்லிமாக்கி அடக்கம்! கணவனின் சடலத்திற்காக போராடும் இந்திய மனைவி!

Published:

Cemetery - 2026

சவூதி அரேபியாவில் இறந்த தன் கணவரின் உடலை மீட்க அவரின் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் இறந்துள்ளார். இது குறித்த செய்தி இந்தியாவில் இருக்கும் அவரது மனைவி அஞ்சு சர்மாவிற்கு தெரிவிக்கப்பட்டது. கணவரது உடலை அனுப்ப கூறி அஞ்சு சர்மா கோரிக்கை வைத்தார்.

ஆனால் மனுதாரருக்கு அவரது கணவரின் உடல் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சஞ்சீவ் குமாரின் உடலை முஸ்லீம் முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தியதில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஜெட்டா செய்த தவறு காரணமாக, இறப்புச் சான்றிதழில் சஞ்சீவ் குமாரின் மதத்தை ‘முஸ்லீம்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சீவ் குமாரின் உடலை தகனம் செய்ய மனைவியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஒப்புதலும் அளிக்கவில்லை.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்நிலையில் தூதரக அதிகாரிகள் செய்த தவறிற்கு மன்னிப்பு கடிதம் அளிக்கப்பட்டது. எனவே ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தனது கணவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இறந்த நபரின் சரியான இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு தகுந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்

Related articles

Recent articles

spot_img