theater
theater

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்கு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நோய் பரவல் வேகமாக இருக்கிறது. தமிழகத்தில் 80 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 400 வரை குறைந்த தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பொதுமக்கள் ஊடரங்கு காலத்தில் இருந்தது போல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை இதுவரை இல்லாத அளவுக்கு நாள்தோறும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்து ள்ளது.

அதேபோல் தனியார் அலுவலங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending