
மேற்கு வங்கத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பாஜக ஆதரவாளரின் மனைவி நந்திகிராமில் உள்ள ராயபாராவில் வீட்டில் நால்வரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வாங்க மாநிலத்த்தின் நந்திகிராமில் ஒரு பாஜக கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த வாரம் அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரத்திக்காக அந்த கட்சியினரோடு வெளியே சென்று விட்டார்
இதை அந்த பகுதியில் இருந்த சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள். அவர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் நேரத்தில் அவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரின் மனைவியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
கடந்த திங்கள்கிழமையன்று அந்த பெண் தனியாக வீட்டிலிருந்தததை அந்த நால்வர் அறிந்து கொண்டு அவர்கள் அனைவரும் அந்த வீட்ற்குள் நுழைந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் மயங்கிய நிலையிலிருந்த அவரை இறந்து விட்டதாக நினைத்து அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் மனைவியை தேடி வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது அவரின் மனைவி அங்குள்ள குளத்தில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியால் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சிகிச்சைக்கு பின் அவர் தெளிந்து போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .