65 வயது முதியவர்.. ஆறு மாதம்.. நாயோடு பாலியல் வன்புணர்வு!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
dog 5 - 2026

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் ஒரு பெண் நாயை பாலியல் வன்புணர்வு செய்ததாக 65 வயதான முதியவரை கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சதுஷ்ருங்கி காவல்துறையின் எல்லைக்குள் உள்ள மாடல் காலனியில் ஒரு குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் 65 வயது நபர் ஒருவர் வசித்து வந்தார். அந்த பார்க்கிங் பகுதியில் ஒரு நாயும் சுற்றிக்கொண்டிருந்தது. அப்போது அந்த முதியவர் அந்த நாயை தனக்கு துணையாக படுக்க வைத்து கொண்டிருந்தார் .

பின்னர் அவர் அந்த நாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மிருக பாதுகாவலர்களும் RESQ அறக்கட்டளையும் அங்குள்ள சிசிடிவி கேமராவை நிறுவி அதை ஆராய்ந்து பார்த்தார்கள். அப்போது அவர் கடந்த ஆறு மாதமாக அந்த பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது .

அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த RESQ அறக்கட்டளையின் மிருக பாதுகாவலர்கள் அந்த முதியவர் மீது பலாத்கார புகாரை போலீசில் அளித்தார்கள். அதோடு அந்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோவையும் கொடுத்தார்கள். போலீசார் அந்த கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்து பார்த்து அதிர்ந்தார்கள்.

உடனே அவர்கள் அந்த முதியவர் மீது மிருக வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள். பின்னர் அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்தனர். இப்போது இந்த நாய் RESQ அறக்கட்டளையின் பராமரிப்பில் உள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.