‘அந்த’ மாத்திரைக்கு ஆட்டோ டிரைவர்! மர்ம நபர்களின் வலையில் ரூ.2.17 லட்சம் இழப்பு!

இந்தியா சற்றுமுன்
autos in madurai
auto

பெங்களூருவில் செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ஆட்டோ டிரைவர் 2.17 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களுரு நகரை ஒட்டிய பெலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு செல்போனுக்கு அழைத்த மர்ம நபர்கள் காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசனை நீங்கள் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பணத்துடன் செக்ஸ் மாத்திரையும் கிடைக்க போகிறது என்ற ஆசையில் மிதந்த டிரைவரிடம், சுமார் 2.17 லட்சம் ரூபாயை களவாடியுள்ளனர். ஆனால், அந்த பணத்தை இழந்தபிறகு தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மெடிசன் பல லட்சம் ரூபாய் விலை ஏமாற்றிய மர்மநபர்கள், இரண்டு வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்டு அவரை ஏமாற்றியுள்ளனர்.

அதாவது, அந்த தொகை மற்றும் மாத்திரைகளை பெற நீங்கள் சில லட்சம் ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை நம்பி ஆட்டோ டிரைவரும் அவர்கள் கேட்ட 2.17 லட்சம் ரூபாய் தொகையை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், செல்போனில் கூறியது போல எந்த காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசனும் பணமும் வரவில்லை, அதற்க்கு பிறகு தான் டிரைவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்த காவல்நிலையத்த்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.