புறாவிற்கு தண்ணீர் கொடுத்த சிறுவன்! வைரல் வீடியோ!

dove - 2026

கோடைகாலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். பல விலங்கு நல அமைப்புகள் தங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது பால்கனியில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் பறவைகள் தண்ணீர் தாகம் தீர்க்கப்படும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு சிறுவன் தனது பால்கனியின் அருகே உட்கார்ந்திருக்கும் ஒரு புறாவுக்கு இரக்கத்துடன் தண்ணீர் வழங்கும் காட்சிகள் உள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நிலையில், அதில் சிறுவன் ஒருவன் கரண்டியில் தண்ணீரை ஏந்தி புறா ஒன்றிற்கு தாகம் தீர்க்க முற்படுகிறான்.

பால்கனியில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒரு கிரில் கேட்டினுள் உள்ளார். ஆனாலும் கேட்டிற்கு வெளியில் தாகத்துடன் அமர்ந்திருக்கும் பறவையை பார்த்து அதற்கு எப்படியாவது தண்ணீர் கொடுத்து விட வேண்டும் என முயற்சி செய்கிறார்.

அதற்காக அவர் ஒரு நீளமான குழி கரண்டியை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி அந்த தண்ணீர் கீழே சிந்திவிடாமல் மிக பொறுமையாக பறவை அருகே கொண்டு செல்கிறார். ஆரம்பத்தில் அந்த புறா சிறுவனை நம்பவில்லை என்று தெரிகிறது,

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

ஆனால் அவன் கையை மேலும் நீட்டும்போது, ​​புறா கரண்டியிலிருந்து தண்ணீர் குடிப்பதைக் காணலாம். சிறுவனின் பெயர், மற்றும் விவரங்களை வனத்துறை அதிகாரி வெளியிடவில்லை. அன்பும், இரக்கமும் கலந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அரை நிமிட காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கொண்டுள்ளது. 5500க்கும் மேற்பட்ட யூசர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். சிறுவனின் கருணையை நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்

சில யூசர்கள் பறவைகள் மற்றும் விலங்குகளை கோடையில் கவனித்துக்கொள்ள பல்வேறு வழிகளை குறிப்பிட்டு வருகின்றனர்.இந்த வீடியோவிற்கு பதிலளித்த ஒரு யூசர், சிறுவனின் படைப்பாற்றலை பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை முதலில் ஏப்ரல் 6ம் தேதி பிரியம்வாடா என்ற நபர் பகிர்ந்துள்ளார். அவரது இடுகையும் சமூக வலைத்தளத்தில் வரவேற்பை பெற்றது. ஒரு குழந்தையிடமிருந்து நாம் எவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும்,

எல்லா உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்பது பற்றி அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக கழிவுநீரில் மூழ்கிய ஒரு நாயை இளைஞர் காப்பாற்றிய வீடியோ வைரலானது. இந்த வீடியோவும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றது. மேலும் அன்பு அனைத்து இடங்களிலும் உள்ளது என பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories