Bihar
Bihar

பீகாரில் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் ரயிலில் இருந்து இறங்கிய உடன் பதறியடித்து ஓடிய மக்கள்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மலை நாடு முழுவதும் பரவி வருகிறது இந்நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அதன் அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கூறுவன தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் பீகாரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை சோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நிதீஷ்குமார் சமீபத்தில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவில் குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் ரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும் போது அங்கு கொரோனா பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள் ரயிலில் பயணம் செய்த மக்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர்கள் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் அங்கிருந்து தப்பித்து ஓடுகின்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்நிலையில் மாநிலத்தில் நேற்று மட்டும் 13 புதிய உயிரிழப்புகள் மற்றும் 6253 புதிய நோயாளிகள் மாநிலம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மக்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending