ஜன்னலை திறந்து வைச்சு புடவை கட்டிய பெண்! வரம்பு மீறிய இளைஞர் !

இந்தியா சற்றுமுன்
saree
saree

இளம் பெண்ணின் தாயார் ஒருவர் வீட்டில் சேலை மாற்றிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞன் தவறாக நடக்க முயற்சி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கோரோனா தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பாலியல் பலாத்காரம், சிறுமிகளிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

இதே போன்றுதான் ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜலஹல்லி என்ற பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில் மகள் மற்றும் தாய் வசித்து வந்துள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் ஒரு இளைஞன் வசித்து வந்துள்ளார்.

தாய் மற்றும் மகள் தனியாக இருப்பதை பார்த்து அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து தேவையில்லாமல் பேசி சென்றுள்ளான். இதையடுத்து ஒருநாள் அந்த இளம் பெண்ணின் தாயாரிடம் படுக்கை அறை உறவுக்கு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் அவரை திட்டி வீட்டைவிட்டு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் பேசுவதையே அந்த இளைஞர் நிறுத்திவிட்டார். பின்னர் அவரது மகளிடம் மட்டும் பேசி வந்துள்ளார்.

ஒருநாள் அந்த இளம் பெண்ணின் தாயார் ஜன்னலைத் திறந்து வைத்து சேலை மாற்றிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞன் அவரது வீட்டிற்குள் மெதுவாக சென்று அந்த தாயை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அவர் கூச்சலிட்ட போது உங்களை யார் ஜன்னலை திறந்து வைத்து சேலை மாற்ற சொன்னது என கேள்வி கேட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான்.

இதையடுத்து அந்த இளம் பெண்ணின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த இளைஞன் மீது புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.