பேஸ்புக்கில் தொழிலதிபராக காட்டி இளம்பெண்களிடம் மோசடி! சலூன் கடைக்காரர் அமீர் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
facebook - 2026

ஒரு சலூன் கடைக்காரர் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார் .

உத்தரபிரதேசத்தின் பிஜ்னவுர் நகரைச் சேர்ந்த அமீர் என்ற 25 வயதான இளைஞர் அங்கு முடிதிருத்தும் சலூன் நடத்தி வருகிறார்.

அவர் சமூக ஊடகத்தில் தன்னை ஒரு தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தொழிலதிபர் போல கோட் போட்டபடி ஊடகத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த பல பெண்கள் அவரிடம் நட்பு கொண்டுள்ளனர். அப்படி அவரோடு பேசும் பெண்களிடம் அவர் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார்.

அப்படி அவரின் வார்த்தையில் மயங்கும் பெண்களிடம் அவர் அவர்களின் அந்தரங்க போட்டோக்களை வாங்கியுள்ளார். பிறகு அவர் அந்த போட்டோக்களை காமித்து அதை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

அப்படி அவரிடம் பல பெண்கள் ஏமாந்துள்ளார்கள். அப்படி ஏமாந்த பலர் போலீசுக்கு போகமால் இருந்தனர். ஆனால் கடைசியாக 13 வயதான டீனேஜ் பெண்ணை அவர் இப்படி போட்டோ வாங்கி ஏமாற்றியதால் அவர் துணிச்சலாக அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் அந்த பெண்ணின் புகாரின் பேரில் அந்த அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை பல பிரிவுகளில் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர், மேற்கொண்டு அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.