பலரால் பாலியல் தொல்லை.. தொழிலுக்காக வாய் திறக்கவில்லை: பிரபல மாடல் புகார்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
abarna dubhe
abarna dubhe

மும்பையில் வசிக்கும் பிரபல மாடலிங் பெண்ணும் பாடலாசிரியருமான 28 வயதான அபெர்னா துபே பாலிவுட்டில் புகழ் பெற்றவர்.

அவர் தன்னை பிரபல புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் உள்பட பன்னிரண்டு செல்வாக்கு மிக்க நபர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர்கள் மீது , மும்பை போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தான் சிரமப்படுவதாக கூறினார்

துபே சட்ட நடவடிக்கைக்கு முயன்றதால், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷீல் குப்தா, வாட்ஸ்அப்பில் அவரை மிரட்டியுள்ளார் . மேலும் சர்வதேச நம்பரிலிருந்து தனக்கு ‘மரண அச்சுறுத்தல்கள்’ வருவதாக துபே கூறுகிறார்.

துபே அளித்துள்ள புகாரில் , அவரை மும்பை மற்றும் பிற வெவ்வேறு மாநிலங்களில் தன்னை பலர் பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் வெளிநாட்டில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்

இதுபற்றி துபே கூறும்போது , தன்னை பலாத்காரம் செய்தவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் போலீசில் அப்போது என்னால் புகாரளிக்க முடியவில்லை. அவர்கள் மிரட்டலுக்கு பயந்தும், தொடர்ந்து வாய்ப்புகளுக்காகவும் தான் அப்போது அமைதியாக இருந்ததாக அவர் கூறினார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அந்த நபர்கள் வெளிநாடுகளுக்கு அவரை அழைத்து சென்று , கோகைன் போன்ற போதை பொருட்களை கலந்து கொடுத்து , தான் மயக்கத்தில் இருந்தபோது பாலியல்தொல்லை கொடுத்ததாகவும் இதனால் கடந்த சில ஆண்டுகளாக தான் மிகவும் மனசோர்வுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார். அவரின் புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.