இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு பெயரும் மாறியது: WHO அறிவிப்பு!

இந்தியா சற்றுமுன்
corona virus
corona virus

இந்தியாவிலிருந்து பரவிய மாற்றமடைந்த வைரஸை இந்திய கொரோனா வைரஸ் என குறிப்பிடக்கூடாது என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு அதற்கு புதிய பெயர் சூட்டியுள்ளது.

உலகம் முழுவது கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ்களுக்கு அறிவியல் பெயர்கள் இருந்தாலும் பொதுவில் அந்தந்த நாடுகளின் பெயரை குறிப்பிட்டே வைரஸ்களின் பெயர் அழைக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வைரஸை அந்தந்த நாடுகளின் பெயரில் அழைப்பதை தவிர்க்க மாற்றமடைந்த வைரஸ்களுக்கு பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

அதன்படி இந்தியாவில் முதலில் பரவிய பி1.617.1 எனும் வைரஸிற்கு ‘கப்பா வேரியண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கண்டறியப்பட்ட மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பி1.617.2 க்கு ‘டெல்டா வேரியண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.