மசூதிக்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
mosque abuses
mosque abuses

வடகிழக்கு தில்லி ஹர்ஷ் விஹாரில் உள்ள ஒரு மசூதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தண்ணீர் எடுக்கச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 48 வயது மதிக்கத்தக்க மௌலானா முஹம்மது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தில்லியில் உள்ள ஹர்ஷ் விஹாரில் உள்ள ஒரு மசூதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தண்ணீர் எடுக்க சென்றபோது 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை 48 வயது மதிக்கத்தக்க முஹம்மது இலியாஸ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் முழுவிவரங்களை தெரிவிக்காத நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் தப்பி ஓடியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

பின்னர் குற்றவாளி பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் இருந்த இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

மேலும் சிறுமியை மசூதிகள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த இலியாஸ் என்பதும் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு காஜியாபாத்தில் உள்ள லோனியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மசூதிக்குள் தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.