மாம்பழம் பறிக்கச் சென்ற சகோதரிகள்! கூடப் போன சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
mango leaves2
mango leaves2

மாம்பழம் பறிக்கும் தகராறில் இரு சகோதரிகளால் உடன் வந்த ஆறு வயதான சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பாகுபேரா கிராமத்தில் ஒன்பது வயது மற்றும் 12 வயதான இரண்டு சகோதரிகள் தங்களின் பெற்றோருடன் வசித்து வந்தார்கள். அந்த சிறுமிகளின் வீட்டிற்கு அருகே ஆறு வயதான சிறுமியும் வசித்து வந்தார்.

இந்நிலையில் அந்த மூவரும் அருகிலுள்ள ஒரு மாந்தோப்பில் சென்று மாம்பழம் பறித்து சாப்பிடுவார்கள். அப்படி கடந்த வாரம் ஒருநாள் மூவரும் அந்த வீட்டருகேயுள்ள ஒரு மாந்தோப்பில் மாம்பழம் பறித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஆறுவயது சிறுமிக்கும் மற்றும் இரு சகோதரிகளுக்குமிடையே சண்டை வந்துள்ளது. அப்போது அந்த இரு சகோதரிகளும் சேர்ந்து அந்த ஆறு வயதான சிறுமியை அடித்து கொன்று விட்டார்கள். பிறகு அவரின் சடலத்தை அந்த மாந்தோப்பிலேயே விட்டு விட்டு வந்து விட்டனர் .

மறுநாள் அந்த மாந்தோப்புக்கு வந்த அதன் உரிமையாளர் அங்கு ஒரு சிறுமி இறந்து கிடப்பதை பார்த்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்கள்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அப்போது அந்த ஆறு வயதான சிறுமியை அவரோடு சென்ற இரு சகோதரிகள் சேர்ந்து கொன்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் போலீசார் அந்த இரு சகோதரிகளை கைது செய்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.