Pornography
Pornography

ஒரு தம்பதிகளின் நெருக்கமான காட்சியை வைத்து பணம் பறித்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென் தில்லியில் வசிக்கும் 30 வயதான கரண் அஹுஜா ஒரு தனியார் நிறுவன ஆலோசகராக இருக்கிறார், அவரது மனைவி எம்.என்.சி.யில் பணிபுரிகிறார் . இந்த ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

பிறகு தங்களுக்கு புதிதாகப் பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக இந்த தம்பதியர் ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தி , வீட்டில் சிசிடிவி கேமராக்களை அமைத்தனர்.

இந்நிலையில் அந்த சிசிடிவி கேமரா சமீபத்தில் ரிப்பேர் ஆனது .அதனால் உத்தரபிரதேசத்தில் உள்ள அசாம்கர் நகரைச் சேர்ந்த ரஷீத் , என்பவரை அந்த கேமராவை சரி செய்ய அழைத்தனர் .

அவர் அந்த கேமராவை சரி செய்த போது அதிலிருந்த அந்த தம்பதிகளின் பெட் ரூம் அந்தரங்க காட்சிகளை கண்டுள்ளார். பின்னர் அவற்றை தன்னுடைய செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அதன் பின்னர் 80 க்கும் மேற்பட்ட அந்த அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி அஹுஜாவை மிரட்டியுள்ளார். உடனே தனக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

பயந்து போன அகுஜா அவருக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மேலும் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அஹுஜா அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து அந்த டெக்னீசியன் ரஷீத்தை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending