பிச்சைக்காரர்கள் இடையில் நகையைப் பகிர்ந்து கொள்வதில் சண்டை: பிறகு…?!

இந்தியா லைஃப் ஸ்டைல்
gold recovery from beggers
gold recovery from beggers

பிச்சைக்காரர்கள் இடையில் நகையைப் பகிர்ந்து கொள்வதில் சண்டை வந்ததால் எதிர்பாராத திருப்பம்….

ஹைதராபாத்தில் பிச்சைக்காரர்கள் இடையே பங்கு பிரித்துக் கொள்வதில் வேறுபாடு வந்ததால் தங்கத் தாலி பத்திரமாக போலீசாரிடம் வந்து சேர்ந்தது. இந்த சம்பவம் பாக்யநகரம் சார்மினார் அருகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத் உப்புகுடா தானாஜி நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சுவாதி ஜூலை 25ஆம் தேதி தன் ஆக்டிவா வாகனத்தில் ஹைதராபாதில் உள்ள சில அம்மன் கோயில்களோடு கூட சார்மினார் பாக்யலக்ஷ்மி ஆலயத்தையும் தரிசித்து வணங்கினார். திரும்ப வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கழுத்தில் இருந்த 4 துலாம் தாலிச் சங்கிலி காணாமல் போய்விட்டதை அறிந்து கவலையடைந்து ஊடனே உள்ளூர் சத்ரிநாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் அவர் சென்ற கோவில்கள் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை பரிசீலித்த போது அந்தப் பெண்மணியின் செயின் அவர் கழுத்தில் இருப்பதைக் கண்டனர். இறுதியாக அவர் சென்ற சார்மினார் பாக்கியலட்சுமி கோவில் அருகில் தான் காணாமல் போயிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

சார்மினார் பாக்கியலட்சுமி ஆலயம் அருகில் 4 பேர் எப்போதும் பிச்சை எடுத்து வருவது வழக்கம். அதில் ஒருவர் 4 துலாம் தங்கதாலி கிடைத்ததை மீதி உள்ள பிச்சைக்காரர்களிடம் கூறினார். ஆனால் கப் சிப் என்று எது கிடைத்தாலும் நாம் நான்கு பேரும் அதனை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் அவர்கள் பங்கு பிரித்து கொள்வதில் வேறுபாடு ஏற்பட்டதால் அந்த சங்கிலியை பிரித்துக் கொள்வதில் தாமதமாகியது. இறுதியில் அவர்களிடையே பெரிய சண்டை ஏற்பட்டதால் ஒரு பிச்சைக்காரன் எனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று போலீசாருக்கு செய்தி தெரிவித்து விட்டான். அதனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

உடனே பிச்சைக்காரர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து நான்கு துலாம் தாலிச் சங்கிலியை பெற்று அந்த நகையை காணாமல் போய்விட்டதாக புகார் சொன்ன சுவாதி தம்பதிகளிடம் அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.