மலை உச்சியில் பூஜை: தவறி விழுந்து பூசாரி உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன்
andra 1
andra 1

ஆந்திராவில் மலை உச்சியில் நின்று பூஜை செய்த போது ஏற்பட்ட விபரீத சம்பவத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது மல்லையா சுவாமி குகைக்கோயில். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி பாப்பையா மலை உச்சியில் நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.