இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 160 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலியாயினர். 29 பேர் படுகாயமடைந்தனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து ராஜஸ்தானில் உள்ள காலியாகோட் என்ற இடத்துக்கு 50க்கும் மேற்பட்டோர் பஸ்ஸில் சுற்றுலா சென்றனர். நேற்று நள்ளிரவு இந்த பஸ் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மச்சிலா மலைப் பாதையில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த தார் மற்றும் ஜாபுவா மாவட்டங்களில் இருந்து போலீசாரும், மீட்பு படையினரும் உடனே விரைந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு ஜாபுவா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மத்தியப் பிரதேச அரசு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

