ஜிதன் ராம் மாஞ்சி ஆதரவு அமைச்சர்கள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

இந்தியா

jitan-ram-manjhi பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும், கட்சித் தலைமைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மாஞ்சிக்கு ஆதரவு அளிக்கும் அவரது அமைச்சரவை சகாக்கள் 7 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது ஐக்கிய ஜனதா தளம். வரும் 20ம் தேதி பீகார் சட்டப் பேரவையில் தனது அரசுக்கான பெரும்பான்மையை நீருபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி. இந்நிலையில் அவரது அமைச்சரவை சகாக்கள் 7 பேர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அவர்களை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர் சரத் யாதவ், அவர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள் மறுக்கவே, 7 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் சரத் யாதவ். அவர்கள் எங்களை மட்டும் அழிக்கவில்லை, பீகார் மக்களையே அழிக்கின்றனர் என்றார் சரத் யாதவ். இப்போது, ஒரே ஒரு தனி அமைச்சர் மட்டுமே ஜிதன் ராம் மாஞ்சி அமைச்சரவையில் உள்ளார். ஏற்கெனவே 2 பேர் வெளியேறினர். 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.