images 33 - 2026

மணிப்பூர் உக்ருல் நகரில் எதிர்பாராத திடீர் நிலநடுக்கம்..

இந்தியா
images 33 - 2026

மணிப்பூர் உக்ருல் நகரில் யாரும் எதிர்பாராத திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஏற்பட்டது சிறிய நிலநடுக்கம் என்றாலும் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தற்போது தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளர். இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.மணிப்பூர் மாநிலத்தில் இது போன்ற நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமான ஒன்று.

ஏற்கனவே இந்த மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தும் கட்டிடங்கள் உட்பட பெரும்பாலான இடங்களில் சேதம் ஏற்பட்டது. மணிப்பூரின் மோசமான நிலநடுக்கம் 1988ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.