கோதாவரியில் படகு மூழ்கி 25 பேர் உயிரிழந்த விபத்து; தொடரும் மீட்புப் பணிகள்!

boat accident telangana - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் அருகில் கோதாவரி நதியில் மூழ்கிய படகு விபத்தில் இதுவரை மூழ்கிய படகை மீட்க முடியாமல் அரசுத் தரப்பு திண்டாடி வருகிறது. 25 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கோதாவரி நதியில் அதிகவேக சுழலில் சிக்கி கச்சலூரு அருகில் தலைகீழாக கவிழ்ந்தது. படகு மூழ்கியதால் பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். விபத்து நடந்தபோது 73 பேர் படகில் இருந்து உள்ளனர். அவர்களில் 27 பேர் உயிர் காக்கும் உபகரணம் மூலம் (லைஃப் ஜாக்கெட்) மற்றும் உள்ளூர் வாசிகள் மூலம் உயிர் பிழைத்தனர்.

மீதியுள்ளவர்களை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது. இந்த விபத்தில் 46 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது.

கோதாவரி நதியில் பாபிகொண்டலு எனப்படும் புகழ்பெற்ற மலைகளுக்கு இடையில் ஆன நதியில் படகுப் பயணம் சுற்றுலா பயணிகளின் உற்சாகமான இடம். ‘கண்டிபோச்சம்மா’ ஆலயத்திலிருந்து அந்தப் படகு கிளம்பி ஒரு மணி நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.

அதிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது படகு செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் 10 மீட்டர் வரை சுழல் உள்ளது. மிகப்பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. படகு மூழ்கிய இடத்தில் கோதாவரி நதியின் ஆழம் 330 அடி. எனவே அந்தப் படகை வெளியே எடுப்பது அசாத்தியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
boat accident ap - 2026

60 அடி ஆழத்துக்கு மேல் கடல் உள் நீச்சலுக்குச் செல்பவர்கள் கூட செல்வது இயலாத காரியம் என்கின்றனர். நீரில் மூழ்கிய படகின் எடை 25 டன். நீரோட்டம் அங்கே அதி தீவிரமாக உள்ளது. செப்டம்பர் 15 அன்று இந்த விபத்து நடந்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளார்கள்.

இரு மலைகளுக்கிடையே வகுடு எடுத்தாற்போல் நதி செல்வதையே பாபிகொண்டலு என்பார்கள். பாபிடி என்றால் வகிடு என்று அர்த்தம். இது மிக முக்கியமான சுற்றுலாத்தலம். படகில் சென்று திரும்புவதே இதன் முக்கிய அம்சம்.

விபத்து ஏற்பட்ட படகுக்குச் சொந்தமானவர் விபத்து ஏற்பட்ட நிலையில் ஓடி ஒளிந்து விட்டார். அதிக அளவு பயணிகள் படகின் முதல் தளத்தில் ஏசி ரூமில் அடைபட்டுவிட்டதாக தெரிகிறது. அதனால் உடல்கள் வெளியே வரவில்லை எனக் கூறப் படுகிறது. நீரோட்டத்தின் கீழ்முகத்தில் வரலாம் என்ற யோசனையின் பேரில் அங்கு வலைகளை விரித்து தேடி வருகிறார்கள்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories