
கம்பு தோசை
தேவையானவை:
கம்பு – 3 கப்,
சிவப்பரிசி, உளுத்தம்பருப்பு – தலா ஒரு கப்,
வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
அவல் – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:

கம்பு, சிவப்பரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். 5 மணி நேரம் ஊற வேண்டும். முதலில் கம்பை போட்டு அரைக்கவும்.
கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு – வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.



