ஒருவழியாய் கடிதம் கொடுத்த துபை போலீஸ்; ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ்

மும்பை:

துபை போலீஸார் ஒரு வழியாக கடிதம் கொடுத்ததை அடுத்து, ஸ்ரீதேவி உடன் இன்று மாலை மும்பை கொண்டு வரப் படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருமண நிகழ்வுக்காக துபை சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, துபையில் உள்ள ஹோட்டல் குளியலறையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், சில சட்டச் சிக்கல்களிருந்ததால், விசாரணை நடத்தப் பட்டது. இன்று காலை வரை விசாரணை நீண்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதரகமும் ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கச் செய்வதில் உறுதுணையாக இருந்தது.

sridevi 3 - 2026

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு செல்வதற்கான முயற்சியாக, விடுவித்தல் கடிதத்தை உறவினர்களிடம் அளித்தனர் துபை போலீஸார்.

இதை அடுத்து பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை கொண்டு வரப்படுகிறது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலில் செலுத்துவதற்காக, மும்பையில் பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.