அட இவரா..? பாஜக.,வின் தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!

bjp nitin nabin sinha - 2026

பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

45 வயதான பீஹார் மாநிலத்தின் இளம் தலைவரான நிதின் நபின் சின்ஹா, பாஜக.,வின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார். தமிழகம், கேரளம், மேற்குவங்க தேர்தல்களுக்குப் பிறகு தேசிய தலைவராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக.,வின் தேசியத் தலைவராக 2020 பிப்ரவரியில்  ஜே.பி. நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்தான். அப்போது அடுத்து வந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தே.ஜ.கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 

தொடர்ந்து கட்சிக்கான புதிய தேசியத் தலைவர் நியமனம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் , பாஜக.,வின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா தற்போது நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளிவந்துள்ளது. பீஹாரைச் சேர்ந்த இவர் பாஜக., மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்.  பங்கிப்பூர் சட்டசபைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். நிதின் நபின் பாட்னாவில் பிறந்தவர்.

பிகாரின் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்.

பிகார் அரசியலில் பாஜகவின் கூர்மையான வியூக வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பான்கிபூர் நகரத் தொகுதியில் 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும் நிதின் நபின் பொறுப்பு வகித்துள்ளார்.

ஊடகங்கள் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ஊகங்களாக சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், நிதின் நபின்  என்ற இந்தப் பட்டியலிலேயே இல்லாத ஒருவரை, எவரும் நினைத்திராத வகையில்  செயல் தலைவராக அறிவித்திருக்கிறது பாஜக.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories