தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Published:

pm modiji in parliament rajyasabha - 2026

”நாடு முழுதும் நம்பகமான தேர்வு முறையை உருவாக்க, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வினாத்தாள்களை கசியவிடும் கும்பல்களை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம்” என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக, நள்ளிரவில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி கூறியதாவது: 

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம்

வீடியோ தமிழ்க் குரல்: ஆர். சுதர்ஸன்

நண்பர்களே, நம்பகத்தன்மை வாய்ந்த தேர்வுமுறை.  இதற்காக ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.  டாஸ்க் ஃபோர்ஸ் ஏற்படுத்துவதாகட்டும், ஃபாஸ்ட்ட்ராக் நீதிமன்றம் ஏற்படுத்துவதாகட்டும், மாநிலங்களின், ஆலோசனைகளை, கருத்தில் கொள்வதாகட்டும்;  பார்த்தால்…. கடந்த பல பத்தாண்டுகளாகவே, ஒவ்வொரு மாநிலமும், மத்திய அரசாங்கமும், இந்த மாதிரியான, வினாத்தாள் கசிவுப் பிரச்சனையை, சந்தித்து வந்திருக்கிறார்கள். 

மாணவர்களுடைய எதிர்காலத்திற்குமே இது, பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.   இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாடுதழுவிய, அது மாநிலங்களிலும் சரி, மத்தியிலும் சரி, கல்விமுறையிலே மாற்றங்கள், அவசியமானவையாக ஆகி விட்டன.   தொழில்நுட்பத்தின் முழுமையான பயன்பாடும், அவசியமானதாக ஆகி விட்டது. 

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அதோடு கூடவே, மீண்டும் ஏதாவதொரு பேப்பர் மாஃபியா, வினாத்தாள் கசிவேற்படுத்தும் குற்றவாளிகள், தேசத்தின் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் கும்பல், அவர்கள் தப்பிக்க முடியாது.   கடுமையான சட்டங்களும் தேவைப்படுகின்றன.  நாங்கள் நாடாளுமன்றத்திலே, மசோதாவை முன்வைத்தோம்.   நான் உங்களிடம் வாக்களித்திருந்தபடியே, கடந்த இரண்டு நாட்களிலே, நாடாளுமன்றத்தின், இரண்டு அவைகளுடைய, பெரும்பான்மையான உறுப்பினர்கள், விரிவான வகையிலே அதுகுறித்து விவாதித்தார்கள். 

மேலும் இன்று, இரண்டு அவைகளுமே, இந்தக் கடுமையான சட்டங்கள் கொண்ட, ஷரத்துக்களை உள்ளடக்கிய, இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள்.   இப்போது, நம்பகத்தன்மைவாய்ந்த தேர்வுமுறையை நோக்கிய, மகத்துவம் வாய்ந்த ஒரு  பணி நிறைவேறியிருக்கிறது.  

பணி மேலும் தொடர்ந்து நடைபெற்றுவரும்.  நாங்கள், இப்படிப்பட்ட நிலையை தொடர்ந்து நீடிக்க விடமாட்டோம்.   இந்த நம்பிக்கையோடு, நண்பர்களே, வாருங்கள், நாமனைவருமாக இணைந்து, வளர்ச்சியடைந்த பாரதத்தின் கனவை நிறைவேற்றும் வகையிலே, தோளோடு தோள் சேர்ந்து பயணிப்போம்.  பலப்பல நன்றிகள். 

Related articles

Recent articles

spot_img