மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்க்குலைக்கும் வகையில் குறைந்த சக்தியுள்ள நாட்டு குண்டுகள் மூன்று இடங்களில் வெடித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

