ஜூலை 22ம் தேதி சந்திரயான்-2 ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா சற்றுமுன் சென்னை தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

chandrayaan2 - 2026

ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து, ஜூலை 22 அன்று சந்திரயான்-2 ஐ ஏவவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னதாக ஏவப்படாமல் நிறுத்தப்பட்ட சந்திரயான் -2 ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு ஏவப்படும் என்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வியாழக்கிழமை இன்று அறிவித்தது.

முன்னதாக, திங்கள்கிழமை இரவு, கடைசி நேரத்தில், இந்தியாவின் இரண்டாவதான ‘சந்திரயான் -2’ ஏவப்படுதல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

“ஜூலை 15, 2019 அன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படாமல் நிறுத்தப்பட்ட சந்திரயான் -2, தற்போது மீண்டும் ஜூலை 22, 2019 திங்கள் அன்று மதியம் 2:43க்கு ஏவப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

chandrayaan2a - 2026உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்ட சந்திரயான் -2, இதுவரை எவரும் கால் பதித்திராத வகையில், நிலவின் ஒரு பகுதியை ஆராயும். இஸ்ரோ தலைவர் சிவன் கருத்துப்படி, விண்கலம் சந்திரனின் தரையிறங்கும் இடம், சுமார் 70 டிகிரி தெற்கே அட்சரேகையில் உள்ளது. இதன் மொத்த நிறை 3.8 டன், இது இந்த ஆண்டு செப்டம்பர் 6 அல்லது 7 ஆம் தேதிகளில் சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக, தரையிறங்க முயற்சிக்கும் முதல் இந்திய விண்கலப் பயணம் இது. இந்தப் பணி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சந்திரனில் மெதுவான தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நான்காவது நாடாக இந்தியா மாறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.