ஆச்சரியப்படும் வகையில்… மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவளித்துள்ள திராவிடர் கழகம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை தமிழகம்

periyarmaiyam1 - 2026

அடடே…! திராவிடர் கழகத்தின் பெரியார் மய்யத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளதாமே..! என்று ஆச்சரியப் படுகிறார்கள், பெரியார் மய்யத்தின் முகப்பைப் பார்ப்பவர்கள்.

இந்திக்கு எதிராக தார் சட்டியைத் தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு ரயில்வே நிலையமாக தேடிப் பிடித்து, கறுப்பு அடித்த கறுப்புச் சட்டைக் காரர்கள், தொடர்ந்து சாலைகளில் வைக்கப் பட்டுள்ள பெயர்க் கற்கள், பலகைகள் என வழிகாட்டும் ஊர்ப் பெயர்களை விட்டுவைக்காமல் அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.

தமிழகத்துக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியாமல் தப்பித் தவறி வந்துவிடும் வடநாட்டுக் காரர்கள், ஊர்ப் பெயரையோ, வழிகளையோ தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று உன்னிப்பாக செயல்பட்டார்கள். காரணம், வடக்கில் இருந்து தமிழகம் வருபவர்கள் பெரும்பாலும், புனிதத் தல சுற்றுலாப் பயணிகளே. அவர்களால் கோயில்கள் வலுப்பட்டு விடக் கூடாது என்றும், கோயில்களுக்கு வருவாய் கூடிவிடக் கூடாது என்பதிலும் திராவிடர் கழகத்தினர் மிகவும் குறிப்பாக இருந்து கொண்டார்கள்.

ஆனால், அதே நேரம், தங்களுக்கு வட இந்தியர்களிடம் இருந்து வருவாய் பெருக வேண்டும் என்ற எச்சில்புத்தியில், தங்கள் பெரியார் மய்யத்தில் மட்டும் ஹிந்தியில் பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள். இதைக் கண்டு இப்போது பலரும் பெரியார் மய்யம் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் வெளியில் இப்படி நடிக்கிறார்கள் என்று தி.க.வின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

இதையே ஒரு கேள்வியாக எழுப்பியிருக்கிறார் பாரதிய ஜனதாக் கட்சி தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் எழுப்பியுள்ள கேள்வியில்,

பெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா? திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி? தார் சட்டியோடு எப்போது கிளம்பப் போகிறார்கள்? – என்று வினவியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.