கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தொடங்கிய லிங்காயத் அரசியல்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

lingayat protest in maharshtra - 2026

கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை லிங்காயத் சமுதாயத்தினர் விடுத்துள்ளனர். இது அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிட மாநிலம் ஔரங்காபாத்தில் ஆணையர் அலுவலகம் முன் லிங்காயத் ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் இது குறித்துக் கூறியபோது, மகாராஷ்டிரா மாநிலத்தில் லிங்காயத் பிரிவை சுமார் 4 கோடி பேர் பின்பற்றி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமுதாயத்தினருக்கு தனி மத அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அது போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

தேசிய அளவில் லிங்காயத் சமுதாயத்தினரை மத சிறுபான்மை குழு என அங்கீகரிக்க வேண்டும். லிங்காயத் சமுதாயத்திற்கு சுதந்திரமான மத நிலைப்பாட்டை அரசு வழங்கும் வரை பேரணிகளை நடத்துவோம் என்று கூறினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img