ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவி போதை மருந்து கொடுத்து பலாத்காரம்: வழிகாட்டிக்கு வலைவீச்சு

Published:

ஜெய்ப்பூர் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவியை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள டுடு என்ற இடத்தில் வைத்து, அந்த ஜப்பானிய மாணவிக்கு போதை மருந்து கொடுத்த சுற்றுலா வழிகாட்டி, பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டுடு போலீசார் அந்த வழிகாட்டியைப் பிடிக்க வலைவீசித் தேடி வருகின்றனர். முன்னதாக ஜெய்ப்பூருக்கு வந்த அப்பெண் அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அந்த வழிகாட்டி அவரைச் சந்தித்துள்ளார். பின்னர் ஜெய்ப்பூரில் இருந்து 60 கி..மீ. தொலைவில் உள்ள டுடு என்ற இடத்தில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த வழிகாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் அப்பெண் சென்றுள்ளார். அங்குதான் போதை மருந்து கொடுத்து, தன்னை அந்த வழிகாட்டி தன்னை பலாத்காரம் செய்ததாக அப்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Related articles

Recent articles

spot_img