சரத்குமார் குரலில் போனில் பேசிய மர்மநபர்! போலீஸ் வலைவீச்சு!

இந்தியா கிரைம் நியூஸ்
sarathkumar - 2026

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாரின் குரலில் பேசி பிரபலங்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த இன்ஜினீயரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

“ஹலோ நான் சரத்குமார் பேசுகிறேன்” என்று கூறி பல பிரபலங்களின் செல்போன் எண்ணுக்கு பேசிய மர்ம ஒருவர் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் சந்தேம் அடைந்த அந்த பிரபலங்கள், சரத்குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, நான் பேசவில்லை என்று சரத்குமார் கூறியபோதுதான் அவர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மர்ம நபரின் நம்பரை வாங்கிய சரத்குமார், அந்த நபரிடம் சாதுர்யமாக பேசினார். அப்போது, அந்த நபகர் கோவை சேர்ந்த இன்ஜினீயர் என தெரியவந்தது.

சாப்ட்வேர் உதவியுடன் பிரபலங்களின் குரலைப் போல் மற்றவர்களிடம் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரத்குமார் தரப்பில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த மர்ம நபர் பேசிய எண்ணை ஆய்வு செய்தபோது கோவை என்று காட்டியது. ஆனால், அந்த நபர் தமிழ் உச்சரிப்புடன் மலையாளம் கலந்து பேசியுள்ளார்.

அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் யாரு யாரிடமாவது பணம் பறிப்பில் ஈடுபட்டாரா ? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.