விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆனார் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே!

vishnu vhp - 2026

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக விஷ்ணு சதாசிவ் கோக்ஜே தேர்வு செய்யப் பட்டுள்ளார். அந்த அமைப்பில், 54 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. அதில், விஷ்ணு சதாசிவ் கோக்ஜே 131 வாக்குகள் பெற்றார். இதை அடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவராகிறார் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே. பல ஆண்டுகளாக இருந்த பிரவீன் தகோடியாவின் சகாப்தம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

வி.ஹெச்.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மத ஆன்மிக அமைப்பாக, அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கரால் தொடங்கி வைக்கப் பட்டது. சுவாமி சின்மயானந்தர் ஆசியுடன் எஸ்.எஸ்.ஆப்தே உடன் இருந்து இந்த அமைப்பு 29-8-1964 அன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம், ஆன்மிக ரீதியில், இந்து மக்களை ஓரணியில் திரட்டி, இந்து தர்மத்தை பாதுகாப்பது.

இந்த அமைப்பு, கோயில்களை கட்டுதல், புனரமைத்தல், பசு வதைத் தடை, பசுவைப் பாதுகாத்தல்,  இந்துக்களை மதமாற்றம் செய்வதைத் தடுத்தல், வேற்று மதங்களுக்குச் சென்றவர்களை தாய் மதம் திரும்பச் செய்தல், பிற சமயத்தவரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இந்து மத வழிபாட்டு இடங்களை மீட்டல், அங்கே மீண்டும் வழிபாட்டு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட மதம் தொடர்புடைய ஆன்மிகச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வேறு பெயர்களில் கிளைகள் உள்ளன. சுமார் 70 லட்சம் பேர் இந்த அமைப்பில் தீவிர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் இந்த அமைப்பு ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. கிராமக் கோயில்களில் உள்ள பூஜாரிகளை ஒருங்கிணைத்தல், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட சேவைப் பணிகளைச் செய்து வருகிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இதன் சர்வதேச தலைவராக இருந்து வந்த பிரவீன் பாய் தொகாடியா, அண்மையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவர் வகித்து  வந்த தலைவர் பதவியில் புதிய நபரை நியமிக்க  நடைபெற்ற ஆலோசனையில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் போனது. இதனால், சுமுகமாக புதிய நபரை நியமனம் செய்யும் வழக்கத்துக்கு மாறாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக குர்கான் நகரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பங்கேற்கும் தகுதிபெற்ற 192 உயர்மட்ட பிரதிநிதிகள் வாக்களித்தனர்.

இதில், இமாச்சலப் பிரதேச மாநில முன்னாள் ஆளுநர் வி.எஸ். கோக்ஜே 131 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராகவா ரெட்டி 60 வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக கோக்ஜே தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories