காவிரி வழக்கு: கர்நாடக தேர்தல் முடிந்த 2வது நாளுக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

இந்தியா சற்றுமுன்

supreme court of india - 2026

புது தில்லி: காவிரி விவகாரத்தில் ஒரு மணி நேரத்துக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், பின்னர் வரும் மே மாதம் 14 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் விசாரணையை வரும் மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கர்நாடகாவில் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் 14ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

மே 14ஆம் தேதி அன்று, காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு எந்த உத்தரவும் இடாததால் தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காவிரி வரைவுத் திட்ட அறிக்கையை மே 14ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மேலும் காலவ அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்றாலும், குடிநீருக்காக காவிரியிலிருந்து 4 டிஎம்சி தண்ணிர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் எந்த வித அறிவிப்பும் செய்யவில்லை.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை, எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்த வழக்கிலும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் தாக்கல் செய்த பதில் மனு மீதும் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால் தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.