சாகர் புயல் உருவாகியுள்ளது; மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Published:

balachandran - 2026

சென்னை: ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் தென்மேற்கு அரபிக் கடலுக்கு குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் கிழக்கு திசையில் ஏமன் நோக்கி செல்லக்கூடும் எனவே தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.

கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்த வரை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தைப் பொருத்த வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார் பாலசந்திரன்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img