பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் சேர்த்த பாதிரியார்கள்!

Published:

church of india - 2026

பாவ மன்னிப்பு கேட்க சர்ச்சுக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் செய்தனர்  பாதிரியார்கள் 5 பேர். செய்தி ஊடகங்களைத் தவிர பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இந்தச் செய்தி.

இப்படிப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற போர்வையிலும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்தும் வருவதால், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்றும் நாட்டுக்கு அவப் பெயரை வலிய ஏற்படுத்தித் தந்து நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் இந்த பாதிரிகள் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்டுவந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து தற்போது தலைமறைவாக உள்ள ஐந்து பாதிரியார்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சு ஒன்றில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரும் தில்லியைச் சேர்ந்த ஒருவரும் பாதிரியார்களாக உள்ளனர்.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “என் மனைவி கேட்ட பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

மேலும் முதல் முறை, பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் குறித்து புகார் அளிக்க முயன்றதால்தான் அடுத்தடுத்து பாதிரியார்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சர்ச் நிர்வாகம் 5 பாதிரியார்களை விடுமுறையில் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரை போலீஸில் புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் தொடர்பான ஆடியோ டேப் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட பாதிரியார்களையும், சர்ச் நிர்வாகியையும் விரைவில் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாகவுள்ள நிர்வாகியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img