ஹிஸ்புல் தலைவர் சையது சலாஹுதின் மகன் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது!

Hizbul Chiefs Son Arrested In Srinagar In Terror Funding Case - 2026

ஸ்ரீநகர்: பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஹிஸ்புல் தலைவரும் பயங்கரவாதியுமான சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துமனையில் ஆய்வக உதவியாளராக சையது ஷகீல் பணிபுரிந்தாா். ராம்பக்கில் வசித்து வந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனா்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்வதற்காக, வெளிநாட்டில் உள்ள அவரது தந்தை சையது சலாஹுதினிடம் இருந்து சட்டவிரோதமாக நிதியைப் பெற்றது தொடா்பான வழக்கில் ஷகீல் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில், சலாஹுதினின் முதல் மகன் ஷாகித்தும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா். இவா், ஜம்மு-காஷ்மீா் வேளாண் துறையில் பணிபுரிந்து வந்தாா்.

பாகிஸ்தானிலிருந்து தில்லி வழியாக ஹவாலா முறையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்க நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. பிரிவினைவாதி சையது அலி ஷா கிலானிக்கு நெருக்கமான ஜி.எம்.பட், முகமது சித்திக் கனாய், குலாம் ஜிலானி லிலூ, ஃபரூக் அகமது தக்கா உள்பட 6 பேருக்கு எதிராக என்ஐஏ இதுவரை 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இந்த 4 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பா் மாதமும், இந்த ஆண்டு மே மாதமும் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சையது அலி ஷா கிலானியின் உறவினா்கள் உள்பட 10 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இதனிடையே, காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-ஏ பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு மீது உச்ச நீதிமன்றத்தில் 31-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், 2 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினை வாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories