பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடனை டீக்கடைக்காரர் மீட்டுள்ளார்!

இந்தியா உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்

பெட்ரோல் ₹ 83 க்கு வித்தும் எண்ணெய் கம்பெனிகளுக்கு பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடன் 1,30,000 கோடி வட்டியுடன் 2,00,000 கோடியை கட்டி டீ கடைகாரர் மீட்டியுள்ளார்…

petrol cost - 2026

பெட்ரோல் விலை குறித்து பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி (Narayanan Thirupathy) குறிப்பிடுவது…

“பங்கு பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி சுமையை எண்ணெய் நிறுவனங்களின் மீது அழுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. நம் சுமையை நம் குழந்தைகளின் மீது சுமத்துகிறோம். அவர்கள் தான் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதை இந்த நாடு உணர வேண்டும்” : பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

2012ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .78.57, பெட்ரோல்/ டீசல் மானியம் ரூ.1,61,029 கோடி. 2013ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .83.62, பெட்ரோல்/ டீசல் மானியம் 1,43,738 கோடி, 2014 ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.80, பெட்ரோல்/டீசல் மானியம் 76,285 கோடி, 2015ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.63.90, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,571 கோடி, 2016ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.62.75, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,738 கோடி, 2017ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.78.67, பெட்ரோல்/ டீசல் மானியம் 7069 கோடி, 2018ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.83.75, பெட்ரோல்/ deesal மானியம் ‘0’. அதாவது 2012-2014 வரை ரூபாய்100 க்கு விற்றிருக்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலை 80 ரூபாய்க்கு விற்றது எண்ணெய் நிறுவனங்கள். மீதமுள்ள 20 ரூபாயை மத்திய அரசு மானியமாக பங்குகளை எண்ணெய் நிறுவனத்திற்கு கொடுத்து சமாளித்து கொண்டிருந்தது. அந்த கடனை கடந்த 4 வருடங்களில் பாஜக அரசு கச்சா எண்ணெய் விலை குறைப்பை உபயோகித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி மக்களின் நிதி சுமையை குறைத்தது என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது நம் கடமை.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

மன்மோகன் சிங் சொன்னது போல் அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் மீது விழ இருந்த நிதி சுமையை கச்சா எண்ணெய் விலை குறைப்பை பயன்படுத்தி சிறப்பான முறையில் கையாண்டது பாஜக அரசு என்பதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

2 thoughts on “பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடனை டீக்கடைக்காரர் மீட்டுள்ளார்!

  1. இந்திய நாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு UPA 2009 ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டு வரை செய்த சூழ்ச்சியை பார்த்தல் அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.