தீபாவளி நாளில் கொட்டப் போகுது கன மழை! சபரிமலைக்குப் போனா.. மழை.. மழை… தயாராய் இருங்க…!

Published:

balachandran - 2026

சென்னை: தீபாவளி நாளில் தமிழகத்தில் கன மழை கொட்டப் போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.6 முதல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என்றும், எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், நவம்பர் 6ஆம் தேதிக்கு முன்னர் கரை திரும்ப வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 6 ஆம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், வரும் 7, 8 ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவின் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img