இது சபரிமலையா? இல்லை பாகிஸ்தான் பார்டரா?: கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்!

Published:

sabarimalai police - 2026

இது சபரிமலையா இல்ல பாக்கிஸ்தான் பார்டரா? எதுக்குடா இவ்வளவு போலீஸ குவிச்சு வெச்சிருக்கீங்க? வேற எவளும் கோவிலுக்கு வர்றதா சொல்லிருக்காளுகளா? – இது தான் கேரள அரசைப் பார்த்து மக்கள் எழுப்பும் கேள்வி. அவ்வளவுக்கு போலீஸ் மற்றும் போலீஸ் என்ற பெயரில் அடிதடியில் கைதேர்ந்த கம்யூனிஸ்ட் குண்டர்கள், ரவுடிகளை காக்கி உடையில் சபரிமலையைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு குவித்திருக்கிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

புனிதம் நிறைந்த ஒரு ஹிந்து ஆலயத்தை, போர்க்களமாக மாற்றியிருக்கிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு!

வரும் நவ.5 திங்கள் கிழமை கோயில் நடை திறக்கும் போது, சென்ற முறை இயலாமல்போன தனது வக்கிரங்களை இந்த முறை தீர்த்துக் கொள்ளலாம் என்று விடாப்பிடியாக தனது கம்யூனிஸ அராஜக நடவடிக்கைகளை எடுத்துள்ளது பிணரயி விஜயன் அரசு.

பத்திரிகையாளர்கள், சமூக சேவகிகள் என ஹிந்துக்கள் அல்லாத கம்யூனிஸ சிந்தனை கொண்ட பெண்களை தெய்வத்தின் சந்நிதிக்கு எப்படியாவது கூட்டிச் சென்று, சபரிமலையின் புனிதத்தை அழித்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்பட்டது கேரள கம்யூனிஸ பிணரயி விஜயன் அரசு. ஆனால், சபரிமலை ஐயப்பன் மீது நம்பிக்கை கொண்ட இயக்கங்களைச் சேர்ந்த பக்தர்கள் கைகோத்து நின்று, கேரள அரசின் சதியை முறியடித்தனர். ஆனால் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல், தடியடி நடத்தி விரட்டியும், அமைதியாக மறியல் போராட்டங்களை நடத்தியவர்களை வீடியோவில் இனம் கண்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, சம்மன் அனுப்பியும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது கம்யூனிஸ பிணரயி விஜயன் அரசு.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்நிலையில், மீண்டும் நாளை நடை திறக்கப்படும் நிலையில், எப்படியாவது பெண்களை அங்கே நிறுத்தியாக வேண்டும் என்ற வீம்புடன் கேரள அரசு பிரபலங்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாம்.

இது குறித்து சபரிமலை விவகாரத்தில் தொடக்கம் முதலே உலகுக்கு சரியான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த ஜனம் டிவி வெளியிட்ட தகவலில், கேரள கம்யூனிஸ்ட்கள் மஞ்சு என்கிற நடிகையை அணுகியதாகவும், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சபரிமலை செல்கிறீர்களா? எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு, நடிகை மஞ்சு, ஆமாம், நாங்கள் சபரிமலை செல்ல முடிவு செய்துள்ளோம்” என பதில் கூறினாராம்.

இதனால் உற்சாகம் அடைந்த கம்யூனிஸ்ட்கள், எப்போது செல்கிறீர்கள்? என்று கேட்க, அதற்கு நடிகை மஞ்சு எனது சகோதர்கள் சபரிமலைக்குச் செல்கிறார்கள் நானும் செல்கிறேன்! ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன்!” என்று கூறினாராம்.

இதனைக் குறிப்பிட்டுள்ள ஜனம் டிவி., இது போல் பலரிடம் அரசின் சார்பில் கம்யூனிஸ்ட் ஏஜெண்ட்கள் பேரம் பேசி வருவதாகத் தெரியவருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதனிடையே, நாளைய நிகழ்வுகளைப் படம் பிடிக்க, சபரிமலை நோக்கி பத்திரிகையாளர்கள் ஊடக வாகனத்துடன் சென்றுள்ளனர்.  ஞாயிறு இரவு 8.30க்கு நிலக்கல்லில் இருந்து கடும் சோதனைக்குப் பின் பத்திரிகையாளர்கள் பம்பைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது திரிவேணி சங்கமம் பாலத்தின் அருகில் நேரலை வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். மீடியா வாகனங்கள் வரிசையாக போலீஸ் அனுமதிக்காக காத்து நிற்கின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img