Kedarnath1 - 2026

குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு, கேதார்நாத், யமுனோத்ரி செல்லும் பாதைகள் முறைப்படி பூஜைகள் செய்விக்கப் பட்டு மூடப்பட்டன.

வெள்ளிக்கிழமை நேற்று காலை 2 மணி முதலே சமாதி பூஜை உள்ளிட்ட வேறு சில பூஜைகள், கேதார்நாத் கோயிலில் தொடர்ந்து செய்யப் பட்டன. தொடர்ந்து ஆலயத்தின் முக்கிய சந்நிதி 8.30க்கு மூடப்பட்டது. பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி பிடி சிங், கோயில் நடை சாத்தப்படும் இன்றைய தேதி வரை, 7,32,241 பக்தர்கள் கேதார் நாத் கோயிலுக்கு வந்திருந்தனர் என்று குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்ட பின்னர், ஐந்து முக சிவ பெருமானின் திருமேனி, ராம்பூருக்கு ராணுவ பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்படுவதாகக் கூறினார் பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் செயல் அலுவலர் என்பி ஜம்லோகி. மேலும், இரவு அங்கே தங்கிவிட்டு, சனிக்கிழமை குப்தகாசியில் உள்ள விச்வநாத் கோயிலில் பூஜைகள் முடித்து, ஞாயிறு நாளை ஊகிமட்டில் உள்ள ஓம்காரேஸ்வர் ஆலயத்தை அடையும் என்று குறிப்பிட்டார்.

குளிர்காலத்தில் கேதார்நாத் பஞ்சமுக லிங்க ஸ்வாமியை ஓம்காரேஸ்வர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இதே போல், யமுனோத்ரி ஆலய கருவறை கதவும் பூஜைகளுக்குப் பின்னர் மூடப் பட்டது. அங்கிருந்து யமுனா மாதா விக்ரஹ திருமேனி கார்சாலி தலத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அது போல் வியாழக்கிழமையே கங்கோத்ரி ஆலயம் மூடப் பட்டது.

புகழ்பெற்ற பத்ரிநாத் ஆலயத்தின் மூலஸ்தானம் வரும் நவ.20ம் தேதி மூடப் படுகிறது. இவ்வகையில் சார்தாம் எனப்படும் உத்தராகண்ட் மாநிலத்தின் நான்கு புனிதத் தலங்களின் யாத்திரை இந்தக் குளிர்காலத்தில் நிறைவுக்கு வருகிறது.

இந்த முறை, கேதார்நாத் கோயிலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending