சபரிமலையில் வியாழன் இரவு வரை 144 தடை நீட்டிப்பு

Published:

sabarimalai without people3 - 2026

பத்தனம்திட்ட: சபரிமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த சபரிமலை சீசன் தொடங்கப்பட்ட பின்னர்,  நான்கு நாட்கள் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது தற்போது இது மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அமைதியை மீண்டும் கொண்டு வருவதற்கு எல்லா வகையிலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக மற்றும் யூடிஎப் இரண்டு கட்சிகளும் சபரிமலையில் தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த இரு கட்சிகளுடன் மாநில அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த போதிலும் துவக்கத்தில் சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அதிகளவிலான பக்தர்கள் சபரிமலை சந்நிதிக்கு வந்து கொண்டுள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

கடந்த வெள்ளிக்கிழமை மிக அதிக அளவிலான மக்கள் வந்ததாக சபரிமலை தேவசம் போர்டு குறிப்பிட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தேவசம் போர்டு கூறுகிறது

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img