ஏழுமலையானை தரிசிக்க வந்த நடிகை ஷ்ரேயா

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
shreya tirupathi - 2026

திருப்பதி:ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி வந்த நடிகை ஷ்ரேயா, திருமலை வந்து  பெருமானை வழிபட்டார்.

பிரபல திரைப்பட நடிகை ஷ்ரேயா இன்று காலை முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார் .

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த ஸ்ரேயா இன்று காலை கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரேயா ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை திருப்பதி கோவிலுக்கு வருவது என்னுடைய வழக்கம். விரைவில் 2019 புத்தாண்டு பிறக்க உள்ளது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.