
அரசு தொடர்பான விழா ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிய, அவருக்கு துணைக்கு ஆட்சியரும் உறக்கத்தில் காட்சி தர… இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கேலியும் கிண்டலுமாக கருத்துகள் உலா வருகின்றன.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தூங்கி வழியும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. புகைப்படமாம், வீடியோ என பலரும் அவற்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டு, கிண்டல் செய்து வருகின்றனர். இது இப்போது ஒரு வழக்கம் ஆகிவிட்டது.
அண்மையில் பழனியில் நடைபெற்ற பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமைச்சரும், ஆட்சியர் வினய்யும் தூங்கி வழிய, இந்தப் படம் இப்போது வைரலாகி வருகிறது.


