
மலையாள கவியும், பாடலாசிரியருமான மறைந்த ஓஎன்வி குறுப்பு பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது, முதல்முறையாக கேரளாவை சாராத கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை பார்வதி விமர்சித்துள்ளார்.
“ஓஎன்வி ஐயா நமது பெருமை. ஒரு கவியாகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஒப்பிட முடியாதது: நம் கலாசாரத்தை செழுமைப்படுத்தியது. அவரது பணியால் நமது இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு அவர் பெயரில் விருதளித்து கௌரவிப்பது அவருக்கு அவமரியாதை செய்வதாகும்” என பார்வதி சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். ஆண்டுக்கணக்காக அதற்கு இதுவரை யாரும் பொங்கி ஆர்ப்பறிக்வில்லை என்பதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாதியும் மதமும் பணமும் பதவியும் பவிஸும் பார்த்து தான் பாலியல் குற்றச்சாட்டிற்கு இங்கு பல பெண்ணியவாதிகள் என்று தங்களை காட்டி கொள்பவர்கள் பொங்கி நடவடிக்கை எடுக்கிறார்கள். குரல் எழுப்புகிறார்கள். கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
நீங்கள் உண்மையில் பெண்ணினத்திற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்காகவும் குரல் கொடுப்பவர்கள் என்றால் அது பல மதபோதகங்களில் நடப்பவைக்கும், கிறிஸ்டியானிட்டி பள்ளிகளில், சர்ச்சில், மதராஸா பள்ளிகளில் , நடக்கும் பாலியல் வன்முறையில் எங்கே உங்கள் குரல்கள்?
வைரமுத்து மீது ஒரு பார்ப்பன பெண் சின்மயி குற்றம் சாட்டியதால் வாய் மூடியிருந்தீர்களா? இங்கே ஜாதி பார்ப்பது யார்? மேற்கு வங்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு கட்சி சார்ந்து வாய் மூடி இருந்தீர்களா? அதற்கு குரல் ஒலிக்கவில்லை சில்லறை பொறுக்கும் சில ஊடகங்களும் இதற்கு கூட்டு.
எந்த பெண்ணிற்கும் எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு உங்கள் குரல் எங்கேயும் ஒரே மாதிரியாக ஒலிக்கட்டும். பாராட்டுவோம். அது ஜாதி மத கட்சி பண பதவி சார்ந்ததாக இருக்க வேண்டாம்.
தற்பொழுது வைரமுத்துவின் இந்த விருதும், அவர் எழுதி சமிபத்தில் வெளியான பாடலும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் உடனடி ஆக்க்ஷன் என பள்ளி விவகாரத்தில் மார்தட்டிக் கொள்ளும் ஆளுங்கட்சி வைரமுத்து விஷயத்தில் கட்சி, பண, பதவி, கூட்டாளி என்பவற்றைத் தாண்டி நடவடிக்கை எடுக்குமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
— Parvathy Thiruvothu (@parvatweets) May 27, 2021