sabarimala devottees - 2026

50 நாட்கள் கடும் விரதம் இருந்து நாங்கள் சபரிமலை ஐயனை காண்பதற்காக வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்யும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் போலீசார் யாரோ இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சபரிமலையை நாசப் படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் தரிசனம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

இன்று காலை அடைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்! எங்களுக்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்!

எத்தனை நாள் விரதம் இருந்து வந்திருக்கிறோம். நெய் திரட்டி, பாதுகாப்பாக மூடி, தேங்காய்களை எடுத்துவந்து, ஐயனின் அபிஷேகத்தைக் காண்பதற்காக வந்திருக்கிறோம். எத்தனை நாள் கடின விரதம் இருந்து வந்தோம். எங்களுக்கு இந்த அரசு அளித்துள்ள பதிலடி இதுதான்!

நாங்கள் சபரிமலை ஐயனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று ஐயப்ப பக்தர்கள் மனம் கதறி அழுதனர்.

இன்று அதி காலை முதலே நிலக்கல்லில் இருந்து பம்பையில் இருந்தும் பக்தர்கள் பல மணி நேரம் கால்கடுக்க நடந்து வந்தும், வரிசையில் நின்றும் வந்திருக்கிறார்கள். சபரிமலை ஐயனைக் காண்பதற்காக வரிசையில் நின்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இருக்கின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்களை நுழைய வைத்து சபரிமலை ஆசாரத்தை அரசு இதன் மூலம் கெடுத்துள்ளது.

சபரிமலை நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் சந்நிதிதானத்தில் இருந்து திருப்பி அனுப்பப் படுகின்றனர். பக்தர்கள் சபரிமலை தரிசனம் செய்ய இயலவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending